by Vignesh Perumal on | 2025-07-19 11:34 AM
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த பாளையம் அருகே உள்ள கூடலூர், ரெனால்ட் மில் அருகில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், ஐந்து பேர் காயமடைந்தனர்.
இன்று காலை, தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு ஜீப், கூடலூர் ரெனால்ட் மில் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த ஐந்து தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜீப் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்தும், விபத்துக்கான சரியான பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!