| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

திமுக சட்டவிரோத ஆதார்...! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்....!

by Vignesh Perumal on | 2025-07-18 08:58 PM

Share:


திமுக சட்டவிரோத ஆதார்...! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்....!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுகவின் "ஓரணியில் தமிழ்நாடு" பிரச்சாரத்தின் போது ஆதார் விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பதாக திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தி.மு.க.வினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். மேலும் தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கட்சியினரின் ஆதார் விவர சேகரிப்பு அரசியலமைப்பு மீறல் என அறிவிக்க வேண்டும். திமுக கட்சியினர் ஆதார் விவரங்களை சேகரிப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதார் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அழிக்க உத்தரவிட வேண்டும். ஆதார் ஆணையம் (UIDAI) மற்றும் இந்திய அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, திமுக மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் விவரங்களை சேகரிப்பது தனிமனித உரிமை மீறல் மற்றும் சட்டவிரோதமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







ஆசிரியர்கள் குழு...

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment