by Vignesh Perumal on | 2025-07-15 07:44 AM
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 மளிகைக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், வசந்தன் மற்றும் சாணார்பட்டி போலீசார் ஆகியோர் இன்று (ஜூலை 15, 2025) சாணார்பட்டி பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வீரசின்னம்பட்டியில் உள்ள மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது, ஜெயலட்சுமி, ரோஜா பேகம் மற்றும் உமர் தின் ஆகியோருக்குச் சொந்தமான 3 மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!