| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

பூஜை பொருட்கள் ஏலம் குச்சனூர் பகவானுக்கே வெளிச்சம்...?????

by admin on | 2025-07-14 12:11 PM

Share:


பூஜை பொருட்கள் ஏலம் குச்சனூர் பகவானுக்கே வெளிச்சம்...?????

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பூஜை பொருட்கள் விற்பனை உரிமம் விற்பனை ஏலம் எடுப்பதில் தயக்கம் ...???

அறநிலையத்துறை /பேரூராட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் ஏலம் எடுப்பவர்கள்

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை வருகின்றனர். பிரதி சனிக்கிழமை மற்றும் சனி பெயர்ச்சி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்.


 கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொறி, உப்பு உடைத்து பொரியை கொடி மரத்திலும் உப்பை அருகில் உள்ள தொட்டியிலும் இடுவர். தொடர்ந்து, மண் காகத்தை ஒரு முறை தலையை சுற்றி காகம் பீடத்தில் வைத்தும் எள்தீபத்தை தலையைச் சுற்றாமல் தீப வட்டத்தில் வைத்தும், அதுபோல எள் சாதம் தயிர் சாதத்தை அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து வழிபாடு செய்வார். இவ்வாறு வழிபாடு நடத்தும் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் வருடம்தோறும் இந்து சமய அறநிலையத் துறையால் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 


 ஆனால் கடந்த வருடங்கள் போல் அல்லாமல் இந்த வருடம் மேற்கண்ட பொருட்களை  விற்பனை செய்ய ஏலம் எடுப்பவர்கள் ஆர்வம் காட்டவில்லை. நேற்று இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட மண் உருவம் மண் காகம் விற்பனை செய்து கொள்ளும் உரிமம்,தேங்காய் பழம் பூஜை பொருட்கள் விற்பனை செய்து கொள்ளும் உரிமம்,எள் பொட்டலம் விற்பனை செய்து கொள்ளும் உரிமம் ஆகிய மூன்று உரிமைகளுக்கான ஏலம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஏலம் எடுத்தவர்கள் உட்பட ஐந்து நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் எள் பொட்டலம் விற்பனை செய்து கொள்ளும் உரிமத்திற்கான ஏலம் மட்டுமே ஏலம் போனது. மீத இரண்டு விற்பனை உரிமங்களும் ஏலம் போகவில்லை.


இது குறித்து ஏற்கனவே தொடர்ந்து மேற்கண்ட 3 பொருட்களின் விற்பனை உரிமம் ஏலம் எடுத்து வரும் நபர்களான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் ஏலம் எடுத்து விற்பனை செய்யும் பொருட்கள் கோவில் வளாகத்தில் அல்லாது வெளியே அமைக்கப்பட்டுள்ள தனியார் கடைகள் மூலம் விற்கப்படுவதால் கோயில் வளாகத்தில் விற்பனை பாதிக்கப்படுகிறது. அதோடு பேரூராட்சி நிர்வாகம் வெளியே உள்ள கடைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அவர்களுக்குள் என்ன இருக்கிறது (உள்குத்து) என்று தெரியவில்லை. கோயில் நிர்வாகமும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது ஏலம் எடுப்பதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏலத்தொகையோடு 10% + 18 % Gst உடன் கட்டப்படுவதால் மொத்தம் ஏலம் எடுக்கும் தொகையுடன் 28 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டியது உள்ளது. இதுவும் சுமையாக உள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தால் லாபம் அடைய நினைப்பவர்கள் பூஜை பொருட்களை விலையை ஏற்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மேல் நான் சுமத்துவார்கள். என்கின்றனர். 

தோஷம் நீங்கும் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இந்த நிலைமை என்றால் பக்தர்களின் நிலை பெரும் பாடு தான் ....

தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தேனி.
அலைபேசி எண் 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment