by Vignesh Perumal on | 2025-07-14 11:31 AM
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் வாராந்திர வழிபாட்டு நிகழ்ச்சி மற்றும் முக்கிய தீர்மானக் கூட்டம் நேற்று (ஜூலை 13, 2025) மாலை தேனி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நேற்று மாலை 7:15 மணி முதல் 8:15 மணி வரை நடைபெற்ற வாராந்திர வழிபாட்டு நிகழ்ச்சி, இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் திரு. செல்வபாண்டியன் ஜீ தலைமையில், தேனி நகர செயலாளர் எல்.ஆர். ஐயப்பன் ஜீ முன்னிலையில் நெறிப்படுத்தப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்து எழுச்சி முன்னணியின் நிறுவனர் பொன். இரவி ஜீ சிறப்புரையாற்றி, அமைப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கினார்.
வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் நடைபெற்ற தீர்மானக் கூட்டத்தில், கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1: ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம் வரும் ஜூலை 20, 2025 அன்று, இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டங்களில் ஒன்றாக, ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் சங்க உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதாகும். மாவட்ட அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.
தீர்மானம் 2: மதுரை மாநகராட்சி ஊழலுக்குக் கண்டனம் மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் சுமார் ₹92 கோடி மதிப்புள்ள ஊழலுக்கு இந்து எழுச்சி முன்னணி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கண்டனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய அம்சங்கள்:
பொதுமக்களின் வரிப்பணத்தை சில அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொந்த லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்துவது முற்றிலும் நிராகரிக்கத்தக்கது. மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தகச் செயல்கள் குறித்து முறையான, சார்பற்ற விசாரணை குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு உடன்பாடாகச் செயல்பட்ட அலுவலர்கள் சட்டப்படி பதவி நீக்கம் மற்றும் வழக்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்களின் நலனில் இடையூறு விளைவிக்கும் ஊழல் மூலமான திட்டங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊழல் குறித்து புகார் கொடுக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பும் நியாயமும் வழங்கப்பட வேண்டியது அவசியம். இந்தத் தீர்மானங்கள் மூலம், இந்து எழுச்சி முன்னணி தனது சமூகப் பொறுப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !
புலிகள் காப்பகம் - மீட்டெடுக்கும் பணி தீவிரம் !
முதலையை பிடிக்க நடவடிக்கை - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் !