| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ரமேஷ் ஆப்சென்ட் - அதிகாரி அப்செட் :

by Satheesh on | 2025-07-04 03:50 PM

Share:


ரமேஷ் ஆப்சென்ட்  - அதிகாரி அப்செட்  :

தேனி: தேவதானப்பட்டி  பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஜனவரி 14ஆம் நாள் பொங்கல் தினத்தன்று மது போதையில் நபர் ஒருவர் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை தகாத வார்த்தைகள் பேசி, மிரட்டல் விடுத்து ரகளை செய்துள்ளார். இதனால், பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அலறி அடித்து ஓடினார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனாலும் போதை ஆசாமி மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் போலீசாரை அவரை அழைத்துச் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில்,  சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், ரமேஷ் தலைமறைவானதால் பல மணி நேரம் காத்திருந்தும் விசாரணை செய்ய முடியாமல்  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரும்பியதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment