by Vignesh Perumal on | 2025-07-03 10:47 AM
ராமநாதபுரத்தில் மதுபோதையில் மாற்றுத்திறனாளி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சிஐடி காவலர் லிங்குசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி ஒருவர் மீது, சிஐடி காவலர் லிங்குசாமி மதுபோதையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாற்றுத்திறனாளியின் கை உடைந்ததாகக் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஒரு காவலரே, அதுவும் மதுபோதையில், ஒரு மாற்றுத்திறனாளி மீது இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியது பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதுபோதையில் தாக்குதல் நடத்திய காவலர் லிங்குசாமி மீது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காவலர் லிங்குசாமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மீதான நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் குறைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட காவலர் மீது மேலும் கடுமையான துறை ரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.