by Vignesh Perumal on | 2025-07-02 07:21 PM
மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் கீழ் செயல்படும் ரயில்வே நிர்வாகத்தின் திடீர் கட்டண உயர்வைக் கண்டித்தும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனப் போக்கில் இருக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (புதன்கிழமை) காலை சங்கு ஊதி எழுப்பும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் உள்ள சிம்னி ஹோட்டல் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எச்.எம். ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என். பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கடந்த நான்காண்டுகளாக ரயில்வே நிர்வாகம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலம் கடத்திக் கொண்டு மெத்தன போக்கில் உள்ளதை கண்டித்து, "தூங்குகிற ரயில்வே நிர்வாகத்தை எழுப்புவோம்" என்ற முழக்கத்துடன் முன்னாள் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஈ.பி. ரவி சங்கு ஊதி போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஆர்.எம். பழனிசாமி கண்டன உரையை துவக்கி வைத்துப் பேசுகையில், "ரயில்வே நிர்வாகம் கடந்த பல ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளைத் தொடர்ந்து மெத்தனப் போக்கில் இருந்தால், விரைவில் ஈரோடு ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்களான எ. மாரியப்பன், எல்.பி. பாலசுப்ரமணியம், எம்.எஸ். ஞானதீபம், முன்னாள் வட்டாரத் தலைவர்களான எம். செல்வராஜ், நசியனூர் நடராஜ், மாவட்டத் துணைத் தலைவர் கே. புனிதன், மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா. கனகராஜன், டி. கண்ணப்பன், மாவட்ட செயலாளர் மாமரத்து பாளையம் கோபி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ். பிரபு, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கு நகர் சதாம் உசேன், மாவட்ட சேவாதளம் தலைவர் எஸ். முகமது யூசுப், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி வின் கண்ணன், என்.சி.டபிள்யூ.சி. மாவட்ட தலைவி ஆர். கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகளான டி.என். சீனிவாசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சூரம்பட்டி சாம்ராட் அசோக், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கை. சுப்பிரமணி, சங்கு நகர் ஆட்டோ அப்துல் காதர், ராஜா, ஜாவித், அக்பர், பெரியார் நகர் சுராஜ், கேமரா செல்வம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, ஆர்.என். புதூர் பெருமாள் மணி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளான சோபியா, கோமதி, சரோஜினி, பிரபாகரி, கலைச்செல்வி, தேன்மொழி, ஜெனிபர், மாவட்ட நிர்வாகிகள் வி.பி. ரவி, கிருஷ்ணம்பாளையம் ரவி, இ.எம். சிராஜுதீன், குளம் சபீர் அகமது, ராஜாஜிபுரம் பி. குமரேசன், டீக்கடை லோகு, சிவாஜி மன்றம் சிவராமன், வள்ளிபுரத்தான் பாளையம் எஸ். தங்கவேலு, சூரம்பட்டி சுரேஷ், வாட்டர் சிவாஜி மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவர் சி. மாரிமுத்து நன்றி உரையாற்றினார். ரயில்வே கட்டண உயர்வு மற்றும் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாதது குறித்து மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் கண்டனத்தை இந்த நூதனப் போராட்டம் வெளிப்படுத்தியது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.