by Vignesh Perumal on | 2025-07-02 02:44 PM
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜூலை 2, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜூலை 2, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூலை 1, 2025), ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனையானது. இந்த தொடர்ச்சியான உயர்வு தங்க முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒரு கலவையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் (22 காரட்) ரூ. 9,065 (+ ரூ. 45)
ஒரு சவரன் (8 கிராம், 22 காரட்) ரூ. 72,520 (+ ரூ. 360) விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையின்மை, மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அதிகரிப்பு, பணவீக்கம் குறித்த கவலைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை பார்க்கப்படுகின்றன. தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருவதால், நுகர்வோர் மிகுந்த கவனத்துடன் தங்கத்தை வாங்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.