by aadhavan on | 2025-07-01 07:29 PM
பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின் 4ஆம் ஆண்டு விழாவில், மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார்.
பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின், 4வது ஆண்டு தொடக்க விழா, மதுரை தாஜ் கேட்வே ஓட்டலில் நடைபெற்றது.
துணை இயக்குனர் எஸ். மகாலிங்கம் வரவேற்றார்.
மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, மைக்கேல் கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிர்வாக இயக்குனர் கோபிசன், இயக்குனர்கள் ஜெயபிரகாஷ், வித்யா ஜார்ஜ், மதுரை டைனமிக் சேப்டர் தலைவர் சரவணகுமார், துணை தலைவர் ராஜ ராஜேஸ்வரன், மெஜஸ்டிக் பொறுப்பாளர்கள் ரவின், முஹம்மது இட்ரிஸ், அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் திறம்பட வணிகம் செய்த உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த காலங்களில் இந்த அமைப்பின் தொடர்புகள் மூலமாக, 600 கோடிக்கும் அதிகமான வணிகம் ஈட்டியதையும் குறிப்பிட்டு வாழ்த்தினர். மேலும், வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை செயலாளர் சக்திதேவி தொகுத்து வழங்கினார்.