by Satheesh on | 2025-07-01 02:57 PM
அடிப்பதற்கு போலீஸ் எதற்கு - மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை, நகை காணாமல் போன வழக்கில் போலீசார் ஏன் FIR பதியவில்லை?
யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது?
சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா?
எஸ்பி ஆஷிஸ் ராவத்தை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்?
உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்க கூடாது.
சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை துவங்கியதா?
போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன, 2 மணி நேரங்களில் விசாரிப்பீர்களா?
அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. முழு உண்மையையும் சொல்ல தமிழக அரசு மறுக்கிறது. C C T V காட்சிகளில் இருந்து மறைக்க வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்தை அடித்து துன்புறுத்தியதா போலீஸ்?
2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் அதிகாரத்தை சிறப்பு படைக்கு கொடுத்தது யார்? காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் போலீசார் இப்படி தான் நடந்து கொள்வார்களா?
உயர் அதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைகளுக்கு போலீசார் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை - நீதிபதிகள்.
அரசே பொறுப்பேற்க வேண்டும்- நீதிபதிகள்.
போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்- நீதிபதிகள்
போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் வழக்கு விசாரணை பிற்பகல் 2.15-க்கு ஒத்திவைப்பு.
இளைஞரின் உடற்கூராய்வு அறிக்கையை 2.15 மணிக்கு சமர்ப்பிக்க ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதிகள் உத்தரவு.
திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - நீதிபதிகள்.
வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியானது.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் நேரில் ஆஜராக வேண்டும்- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
செய்தியாளர் : N சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.