by Vignesh Perumal on | 2025-07-01 11:58 AM
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களுக்கு முன்பு மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த திடீர் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் சந்தீஷ், இனி சிவகங்கை மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற காவல் துறை நடவடிக்கைகளையும் கூடுதலாக கவனிப்பார். இந்த மாற்றம் சிவகங்கை மாவட்ட காவல்துறையில் சில நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடமாற்றம் குறித்து மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.