| | | | | | | | | | | | | | | | | | |
உலகம் உலகம்

ஃபால்கன் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது :

by Satheesh on | 2025-06-25 06:17 PM

Share:


ஃபால்கன் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது :

விண்வெளிக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் . 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்கிறார் இந்திய வீரர்ஆக்ஸியம் 4 திட்டத்தில் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட்!

ஃபால்கன் 9 ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்தது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கியது. விண்கலத்தின் முதல்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின் பூமிக்கு திரும்பியது. மதியம் 12.01 மணிக்கு புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும். நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும்.  இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர்.

சுக்லா அனுப்பிய செய்தியில், ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது என க்ரு-டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாக இறங்குவோம். பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு இந்தியரும் இந்தப் பயணத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் : N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment