by Vignesh Perumal on | 2025-06-21 04:10 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பழனி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் மேற்பார்வையில், பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, பழனியில் உள்ள APA கல்லூரி பின்புறம் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பழனியைச் சேர்ந்த நாகேந்திரபிரசாத் (23), மருது (21), டான்பீட்டர்ஜீவன் (23), வெங்கடேஸ்வரன் (28) என்பதும், அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நான்கு பேரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை ஒழிப்பதில் காவல்துறை தீவிரமாக உள்ளதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!