| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வைகை அணையில் குடிநீர் தொட்டி பராமரிப்பு தரமற்ற பணி...!!!!

by admin on | 2025-06-21 03:51 PM

Share:


வைகை அணையில் குடிநீர் தொட்டி பராமரிப்பு தரமற்ற பணி...!!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில்  முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக  தேனி மாவட்டம் வைகை அணை விளங்கி வருகிறது. இங்கு கேரளா மூணாறு செல்கின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வைகை அணை வந்து அதன் அழகை ரசித்து செல்கின்றனர்.


 தரமற்ற பணி:

 வைகை பொதுப்பணித்துறையில் வேலை செய்கின்ற  பணியாளர் தங்கியுள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வைகை இல்லம் ஆகிய பகுதிகளுக்கு வைகை ஆற்றில் நீர் எடுத்து சுத்திகரிப்பு தொட்டி அமைத்து இதன் மூலம்  சுத்திகரிப்பு செய்த நீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சுத்திகரிப்பு செய்து நீர் வழங்கி வந்த சுத்திகரிப்பு நீர் தொட்டி சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க ரூபாய் 4 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பணிகள் நடைபெற்று வருகிறது

 இவ்வாறு நடைபெறும் பணியில் ஏற்கனவே இருந்த செங்கல் கற்களை வைத்து முழுமையாக சேதமடைந்த பகுதிகளை அகற்றாமல்  தரமற்ற பணி நடைபெற்று வருகிறது.


 மேலும் சுரங்கப் பாதையில்  சுவர்களை சுத்தமாக சுரண்டி எடுத்துவிட்டு  வெள்ளை அடிப்பதற்காக ரூபாய் 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் சுவற்றில் ஏற்கனவே உள்ள சுண்ணாம்பு கறைகளை முழுமையாக அகற்றாமல்  அதன் மீது  தொகுப்பு புதிய பணியாளர்களை வைத்து  வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தரமான பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment