by Vignesh Perumal on | 2025-06-21 02:33 PM
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உறவினரும், பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவருமான ஆதித்யாவிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை தரமணி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெருங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் உறவினரான கல்லூரி மாணவர் ஆதித்யா, கடந்த புதன்கிழமை இரவு தனது காரில் பெருங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரின் பம்பரில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. சத்தம் எதனால் ஏற்பட்டது என்று பார்க்க ஆதித்யா காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அவர் காரை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்துள்ளது. அவர்களில் சிலர் கத்தியைக் காட்டி ஆதித்யாவை மிரட்டி, அவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.
ஆதித்யா சுதாரித்துக் கொண்டு, அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரும் சூழல் ஏற்பட்டதால், அந்தக் கும்பல் வழிப்பறி முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஆதித்யா உடனடியாக தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தும், ரகசிய தகவல்களின் அடிப்படையிலும், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையின் முடிவில், பெருங்குடி, கல்லு குட்டையைச் சேர்ந்த சங்கர், எலி ஸ்ரீகாந்த், முகேஷ், ஷாம், மகேஷ் மற்றும் ஒரு 16 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்த வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் உடனடியாக செயல்பட்டு ஆறு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெருங்குடி பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!