by admin on | 2025-06-21 01:16 PM
கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை இழுத்துச் சென்றதாக கூறப்பட்ட சிறுமியின் உடல் வீட்டின் அருகில் மீட்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் சிறுவியின் இரண்டு கால்களும் இல்லாமல் ஒருகால் மட்டும் தனியாக இருக்கும் சூழ்நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அரசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 50,000 முன்பணமாகவும் மீதமுள்ள பணம் அவரது குடும்பத்தாரிடம் நேரடியாக அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக நேரில் சந்தித்து அவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பின்னர் கொடுக்கப்படும் என்று வால்பாறை திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் கூறினார்
நிருபர் உதய ராணி கோவை.