by Vignesh Perumal on | 2025-06-21 12:31 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், வத்தலகுண்டு, கொடைரோடு ஆகிய பகுதிகளில் திமுக குறித்து அவதூறான வாசகங்களுடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றி கழகம் சார்பாக நடிகர் விஜய் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் தொடர்பாக 3 காவல் நிலையங்களில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், வத்தலகுண்டு, கொடைரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் "திருடர்கள் முன்னேற்ற கழகத்தை அரசியலில் இருந்து அகற்ற வந்த அண்ணா" என்ற வாசகத்துடன், நடிகர் விஜயின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்கள் ஆளும் கட்சியான திமுகவை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருந்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
இந்த போஸ்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. திமுகவினர் மத்தியில் இந்த போஸ்டர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், போஸ்டர்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், வத்தலகுண்டு காவல் நிலையம், நிலக்கோட்டை காவல் நிலையம் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில், அம்மையநாயக்கனூர், பள்ளபட்டியைச் சேர்ந்த நல்லுதேவர் மகன் ஜெயச்சந்திரன் (45) மற்றும் ராமர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயச்சந்திரன் என்பவர் இந்த போஸ்டர்களை அச்சடித்து ஒட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் இந்த போஸ்டர்களை ஒட்டச் சொன்னது யார், இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ராமர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் நிலவுவது சாதாரணம் என்றாலும், இது போன்ற அவதூறான போஸ்டர்கள் மூலம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!