by aadhavan on | 2025-06-21 12:08 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் முனைவர் வ.சண்முகசுந்தரம் தலைக்கவசங்களை வழங்கிய போது எடுத்த படம்
» மு.ஆதவன்
மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.
காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடந்த நிகழ்வுக்கு, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார். ட்ரு ஹோம் பைனான்ஸ், எலிக்ஸிர் ஃபவுண்டேஷன் இணைந்து இவற்றை வழங்கின. பாதிக்கப்பட்ட ஆண்கள் பெண்கள் முதியோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அவற்றை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தரமான தலைக் கவசங்களை வழங்கினார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் முனைவர் வ.சண்முகசுந்தரம், காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித், ட்ரு ஹோம் மற்றும் எலிக்ஸிர் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!