by Vignesh Perumal on | 2025-06-21 11:01 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நகர தெற்கு காவல் நிலைய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, திண்டுக்கல் மொட்டணம்பட்டி சாலை, கல்லறைமேடு அருகே சந்தேகப்படும்படியாக சிலர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (30), காமராஜபுரத்தைச் சேர்ந்த சங்கர் (33), மேட்டுப்பட்டியைச் சேர்ந்த இன்னாசிராஜ் (40), சார்லி (38), மற்றும் நரிப்பாறையைச் சேர்ந்த பிரபு (30) என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை காவல்துறைக்கு அளித்து ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!