| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிறுமியை பாலியல் வன்புணர்வு...! வாலிபர் போக்சோவில் கைது...!

by Vignesh Perumal on | 2025-06-21 10:50 AM

Share:


சிறுமியை பாலியல் வன்புணர்வு...! வாலிபர் போக்சோவில் கைது...!

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் சரவணன் (19) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில், தங்கள் மகளை யாரோ ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (19) என்ற வாலிபர், அச்சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சரவணனை உடனடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ (குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சரவணன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 



நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment