by admin on | 2025-06-21 08:25 AM
தேனி மாவட்டத்தில் நிலத்தகராறில் வன்முறை: ACV மில் உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் நில உரிமை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினை வன்முறையாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் சிவாஜிக்கும், அதே பகுதியில் உள்ள ACV மில் உரிமையாளர் சந்திரசேகரின் சகோதரர் குமாருக்கும் இடையே நில உரிமை தொடர்பாக முறுகல் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த 05-06-2025 அன்று காலை 6 மணியளவில், சிவாஜி திருப்பதி தோட்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதே பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த குழுவினர் அவரை தாக்கினர். தாக்குதலில்:ACV குமாரின் ஆதரவாளர் சுந்தர்ராஜன்அவரது மகன் நவீன்உறவினர் ரெங்கராஜ் வடபுதுப்பட்டியைச் சேர்ந்த சிவமுருகன்
மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத மூன்று பேர் ACV குமாரிடம் பிரச்சனை செய்யக்கூடாது” என்று கூறி திட்டமிட்டு தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மிளகாய்பொடி தூவிய பின்னர், இரும்புக் கம்பியால் கொலை வெறியுடன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, சிவாஜிக்கு பல இடங்களில் காயமடைந்ததுடன், கால் மற்றும் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீஸ் நடவடிக்கை:
தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளதுடன், முக்கிய குற்றவாளியான ACV குமாரை தேடிவருகின்றனர். மேலும், தினமும் குற்றவாளிகள் அப்பகுதியில் நடமாடுவதையும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி. முத்துக்காமாட்சி எடிட்டர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!