by Vignesh Perumal on | 2025-06-20 04:07 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதை அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேசமயம், இந்து முன்னணியினரும் அதே இடத்தில் எதிர் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பியதால் பதற்றம் நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார், இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் இழுத்துச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகர் டி.எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்தனர்.
இந்த மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக திண்டுக்கல்லில் சில இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!