by Vignesh Perumal on | 2025-06-19 03:09 PM
வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் முருக பக்தர்கள் மகா மாநாடு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக மாறியுள்ளது. வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வருவது உறுதிப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த மாநாடு தமிழக மக்களிடையே ஆன்மிக எழுச்சி, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் மாற்றம் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாடு, தமிழக சமூகத்தில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. "தமிழகத்தில் மாற்றம் தேவைதானா?", "இந்து மரபு, ஆன்மிகம், சமுதாய ஒற்றுமை ஆகியவை மீண்டும் எழவேண்டாமா?" போன்ற விவாதங்கள் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் ஆன்மிக உணர்வுடன் இந்த மாநாட்டை மக்கள் வரவேற்க, மறுபுறம் இதன் அரசியல் பின்னணி குறித்த விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.
இந்த சூழ்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவரது இந்த வருகையின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
திருமாவளவனின் இந்தச் செயல் உண்மையான பக்தியின் வெளிப்பாடா அல்லது மக்கள் மத்தியில் எழுந்து வரும் ஆன்மிக எழுச்சியால் ஏற்பட்ட அரசியல் அச்சத்தின் வெளிப்பாடா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக முருக பக்தர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. பக்தர்கள் ஒருபுறம் "சாமி தரிசிக்க வந்தது நன்றாகவே இருக்கிறது" என்று எண்ணினாலும், மறுபுறம், "இவ்வளவு காலமாக முருகன் கோவிலுக்குச் செல்லாத ஒருவர், திடீரென்று இப்போது திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்லத் தூண்டிய காரணம் என்ன?" என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
திருமாவளவனின் இந்த திடீர் கோவில் வருகைக்கான உந்துதல் முருகப்பெருமானிடமிருந்து வந்ததா, அல்லது வருகிற தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையின் அரசியல் கணக்கிலிருந்து வந்ததா என்ற கேள்விக்கு பலரும் மௌனமாக நிற்கின்றனர். "இது முருகப்பெருமானுக்கே தெரியும்" என்று இந்து எழுச்சி முன்னணி - தேனி மாவட்டம் கருத்து தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், மதுரையில் நடைபெறவிருக்கும் முருக பக்தர்கள் மாநாடு, தமிழகத்தில் ஆன்மிகம், சமூகம், அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!