by Vignesh Perumal on | 2025-06-18 02:41 PM
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ரா.அருள், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரா.அருள், தனது உடல்நிலையில் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், எம்.எல்.ஏ. அருளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
பா.ம.க. தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் எம்.எல்.ஏ. அருளின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!