by Satheesh on | 2025-06-16 02:06 PM
சென்னை : காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது தரப்பின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்படும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் முன் ஜாமின் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ADGP ஜெயராமனும் ஆஜராக உத்தரவு. ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவு. ஆள் கடத்தலுக்கு ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் நீதிமன்றத்தில் தகவல்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!