by Satheesh on | 2025-06-15 02:11 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் பிறந்தவர். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்தார். பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள். ஆயிசு நூறு, கோபால கோபாலா உள்ளிட்ட படங்களில் பாட்டி வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் கலைமாமணி விருது பெற்றவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி நேற்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஏராளமான அஞ்சலி செலுத்திய பின்னர் தகனம் செய்யப்பட்டது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!