by Satheesh on | 2025-06-15 08:58 AM
திண்டுக்கல்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்த முருகன் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மேற்பட்ட தனியார் ATM-களில் பணம் நிரப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார் இந்நிலையில் முருகனிடம் வேலை பார்த்து வரும் நாகார்ஜுன் என்பவரிடம் தனியார் ATM-களில் நிரப்புவதற்காக பணம் கொடுத்து அனுப்பி இருந்த நிலையில் நாகார்ஜுன் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ATM-களில் பணத்தை நிரப்பி விட்டு சின்னாளப்பட்டியில் உள்ள ATM-ல் பணத்தை நிரப்புவதற்காக செம்பட்டியில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது புதுகோடங்கிபட்டி to நடுப்பட்டி இடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் நாகார்ஜுனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.29 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!