| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

புறநகர் ரயில் சேவையில் காலதாமதம்....! பயணிகள் கடும் அவதி.....!

by Vignesh Perumal on | 2025-04-17 10:21 AM

Share:


புறநகர் ரயில் சேவையில் காலதாமதம்....! பயணிகள் கடும் அவதி.....!

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் இன்று (17.04.2025) காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கத்தை விட தாமதமாக புறப்பட்டுச் செல்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பெரும்பாலான புறநகர் ரயில்கள் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பணிக்குச் செல்வோர் மற்றும் அன்றாடப் பணிகளுக்காக நகருக்குள் வருவோர் என ஏராளமான பயணிகள் குறித்த நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஆவடியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்ல வழக்கமாக 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், தற்போது ரயில் தாமதம் காரணமாக ஒரு மணி நேரம் வரை ஆவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், காலையில் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பல ரயில் நிலையங்களில் பணிபுரியும் மேலாளர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் சரிவர தெரியவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக, ரயில் தாமதம் அல்லது பிற குறைபாடுகள் குறித்து அவர்களிடம் புகார் தெரிவிக்க முடியாமல் பயணிகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள இந்த காலதாமதத்திற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், தண்டவாள பராமரிப்பு பணிகள் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று பயணிகள் மத்தியில் பேசப்படுகிறது.

எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு புறநகர் ரயில் சேவையை சீராக்க வேண்டும் என்றும், ரயில் நிலையங்களில் மொழிப் பிரச்னையின்றி பயணிகள் புகார் தெரிவிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காலதாமதம் நீடித்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment