| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மாற்றம்....! அடுத்து யார் தெரியுமா....?

by Vignesh Perumal on | 2025-04-17 09:38 AM

Share:


உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மாற்றம்....! அடுத்து யார் தெரியுமா....?

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மே 13-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகம் சஞ்சீவ் கண்ணாவுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர். கவாயின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக மே 14-ம் தேதி பி.ஆர். கவாய் பொறுப்பேற்பார்.

பி.ஆர். கவாய் நவம்பர் 24, 1960 அன்று மகாராஷ்டிராவின் அமராவதியில் பிறந்தார். அவர் 1985 இல் தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2003 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2019 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


அவர் 2016 ஆம் ஆண்டு மோடி அரசின் பணமதிப்பிழப்பு வழக்கில் மற்றும் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையை நீதிபதி கவாய் பெறுகிறார்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment