| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-17 08:56 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்


மாவட்டம்: விருதுநகர் மாவட்டம்


அமைவிடம்: அருப்புக்கோட்டை


ஏற்றம்: 144 m (472 அடி)


மூலவர்: சொக்கநாதர்


தாயார்: மீனாட்சி அம்மன்


சிறப்புத் திருவிழாக்கள்: மகா சிவராத்திரி


கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை


கோயில்களின் எண்ணிக்கை: ஒன்று


அமைப்பு: இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள இக்கோயில் ஐந்து நிலை ஐந்து கலசங்களைக் கொண்ட கோபுரத்தைக் கொண்டுள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். மூலவருக்கு வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அடுத்து மீனாட்சி அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, கற்பகவல்லி, லிங்கோத்பவர் உள்ளனர். இறைவியின் கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய சக்திகள் உள்ளனர். திருச்சுற்றில் கன்னி மூல கணபதி, விநாயகர், முருகன், சிவகாமி, சப்த கன்னி, வடக்கு திசை நோக்கிய நிலையில் சண்டிகேசுவரர், சரசுவதி, வல்ல சித்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிமணியர், மகாலட்சுமி, கால பைரவர், சந்திரன், நவக்கிரகம், நந்தி, ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். ஒவ்வோராண்டும் மார்ச் 20ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம். இங்குள்ள படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் காணப்படுகிறார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment