| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் கலெக்டர்...!!!

by Muthukamatchi on | 2025-04-16 09:09 PM

Share:


உங்களைத் தேடி உங்கள் ஊரில் கலெக்டர்...!!!

தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம்  வட்டத்தில்                        மாவட்ட ஆட்சித்தலைவர்   ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,     ஆய்வு மேற்கொண்டார்.தேனி மாவட்டம், வட்டத்தில் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,  நியாயவிலைக்கடை,  அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான காப்பகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  நூலகம், வேளாண் விரிவாக்க மையம், நுகர்பொருள் வாணிப கழகம், மஞ்சளாறு அணை மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  இன்று (16.04.2025)  ஆய்வு மேற்கொண்டார்.             


   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்து                                         நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும்,  மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு இயந்திரம் முழுவதுமாக களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத்தேடி, உங்கள் ஊரில்  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்படி                         மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாதந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று  பெரியகுளம் வட்டத்தில்,                      பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் நேரடியாக  களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 

பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத்துறையின் சார்பில் பயனாளி ஒருவருக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினாரதாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில்  நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவிடும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தாமரைக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு,  மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், திருக்குறள் ஒப்புவித்த மாணவியை பாராட்டி புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்கினார்.            

 தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து    ஆய்வு மேற்கொண்டு, ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கஅதனைத் தொடர்ந்து, தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் மற்றும்  வடுகபட்டி பேரூராட்சியில் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கெண்டுவருமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கவியரசு கண்ணதாசன் நூலகத்தில் புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும்,  தினசரி நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் எண்ணிக்கை, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியன குறித்து கேட்டறிந்தார். மேலும், நூலகத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். ஜெயமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடு மற்றும்  பிரதான் மந்திரி ஆவாஸ்  யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடு மற்றும்   வடுகபட்டி பகுதியிலுள்ள  வேளாண் விரிவாக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல், சிறுதானியம், பயிறுவகை உள்ளிட்ட  பல்வேறு  விதைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு,  போதிய விதைகள்  இருப்பில் உள்ளதா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பராமரிக்கப்படும்  பதிவேடுகள் குறித்தும் ஆய்வு  மேற்கொண்டார்.                எ.புதுப்பட்டி ஊராட்சியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, படுக்கை வசதி, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்ட பிற பதிவேடுகளையும்,  மருந்தகம்,  பரிசோதனைக் கூடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும்,  மேலும்,  ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நல்லகருப்பன்பட்டி பகுதியில் உள்ள  நுகர்பொருள் வாணிப  கழக கிட்டங்கியில் நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு,  போதிய பொருட்கள்  இருப்பில் உள்ளதா என அலுவலர்களிடம் கேட்டறிந்தா மஞ்சளாறு அணை நீர் பிடிப்பு  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அணையின் நீர்மட்டம் குறித்து கேட்டறிந்தார்.  அதனைத் தொடர்ந்து, ராசிமலை பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களை சந்தித்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை முதல் பிற்பகல் வரை துறை அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து எடுத்துரைத்தனர். சார் ஆட்சியர்  அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான அடையான அட்டையினை 5 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரியகுளம் வட்டத்தில்       நாளை (17.04.2025) காலை வரை பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.   இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி,  பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், இ.ஆ.ப.,  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி சாந்தி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திருமதி சாந்தாமணி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திருமதி நிர்மலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  திருமதி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)  அண்ணாதுரை,  முதன்மை கல்வி அலுவலர் திருமதி இந்திராணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கிறிஸ்டோபர்தாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரு,  மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி மாரிசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி, தாட்கோ மேலாளர் திருமதி சரளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி சந்தியா,               மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சியாமளாதேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம், உதவி இயக்குநர் (நில அளவை) திரு.அப்பாஸ், துணை காவல் கண்காணிப்பாளர் தநல்லு, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர்              திருமதி தமீஹா சுல்தானா, வடுகபட்டி பேரூராட்சித் தலைவர் நடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மலர்விழி, பாலகிருஷ்ணன்,  வட்டாட்சியர் மருதுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment