by Muthukamatchi on | 2025-04-16 07:49 PM
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 6-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது.இதில் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இவர்களை மற்றொரு வண்டியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர் - இந்நிலையில் சிறுமலை விபத்தில் காயம் அடைந்தவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஆகியோர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
நிருபர்கள் பாலாஜி ,கதிரேசன் பழனி.