by Vignesh Perumal on | 2025-04-16 02:25 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கம்பம் சாலையில் வீற்றிருக்கும் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியகுளம்-கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதனையொட்டி, அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் மிகவும் அழகாக காட்சியளித்தார்.
இந்த சிறப்பு அலங்காரத்தை காணவும், அம்மனின் அருளைப் பெறவும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு அலங்காரத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பக்தர்கள் அம்மனின் அழகிய தோற்றத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போயினர். இது போன்ற சிறப்பு அலங்காரங்கள் அவ்வப்போது காளியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.