by Vignesh Perumal on | 2026-03-31 12:56 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் மீது சென்னை பெரவளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பெரம்பூர் தொகுதியில் விஜய் வாகனப் பேரணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முறையான அனுமதி பெறாமல் கூடுதல் கூட்டத்தைக் கூட்டியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனமும், திரண்டிருந்த தொண்டர்களும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை மறைத்து நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைக்காகச் சென்ற நோயாளி பாதிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்ட நிலையில், 5,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களைத் திரட்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது.
அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் (30-க்கும் மேற்பட்ட மைக்குகள்) கூடுதலாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது.
பெரம்பூர் எஸ்.எம். நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த குறுகிய இடத்தில் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தும், அந்த இடத்திலேயே பிரச்சாரம் மேற்கொண்டது.
பெரவளூர் போலீஸார் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொதுப் பாதையை மறித்தல், சட்டவிரோதமாகக் கூடுதல், தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்ட இதர பிரிவுகள்.
இந்த வழக்குப் பதிவு குறித்துப் பேசிய தவெக நிர்வாகிகள், "திமுக அரசு திட்டமிட்டு எங்கள் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்குத் முட்டுக்கட்டைப் போடப் பார்க்கிறது. ஆம்புலன்ஸ் வந்தபோது தலைவர் அவர்களே வழியை விடச் சொல்லி மைக்கில் அறிவுறுத்தினார். ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள வேண்டிய தேர்தலை, இது போன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்ளப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தகராறு..! கொத்தனாருக்குக் கொலை மிரட்டல்...! வாலிபர் கைது...!
தேனி உள்ளிட்ட 68 சுங்கச்சாவடி..! கட்டண உயர்வு..! இன்று நள்ளிரவு முதல் அமல்..!
தேனி உள்ளிட்ட 68 சுங்கச்சாவடி..! கட்டண உயர்வு..! இன்று நள்ளிரவு முதல் அமல்..!
தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..! எதுக்கு தெரியுமா...?
சூடுபிடிக்கும் அரசியல் களம்...! முதல்வர் வாகனத்தில் பறக்கும் படை...! அதிரடி சோதனை...!