by Vignesh Perumal on | 2026-03-21 06:52 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில், உரிய ஆவணங்களின்றி டாட்டா சுமோ காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.52,500 ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் பறக்கும் படைத் தலைவர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ கார் ஒன்றை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அந்த காரில் வந்த மகேஸ்வரன் (49) என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.52,500 ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைப்படி ரூ.50,000-க்கு மேல் உரிய ஆதாரமின்றிப் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்தப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் ஆகியோரிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.
அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட அந்தப் பணம், உடனடியாக அரசுப் பாதுகாப்புடன் கருவூலத்தில் (Treasury) ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மாவட்ட அளவிலான குழுவின் விசாரணைக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தூத்துக்குடி சம்பவம் - போலீசாரை பாராட்டிய டி ஐ ஜி !
மயங்கி விழுந்த முதியவருக்கு முதலுதவி செய்த எஸ்.பி. ஸ்டாலின்...! குவியும் பாராட்டுக்கள்...!
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் அதிரடி ஆய்வு...! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...!
ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு...! ரூ.10 லட்சம் பறிமுதல்...!
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,350 பறிமுதல்...!