| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் ஆவேச பேச்சு..! தொண்டர்கள் ஆரவாரம்..!

by Vignesh Perumal on | 2025-03-17 08:24 AM

Share:


பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் ஆவேச பேச்சு..! தொண்டர்கள் ஆரவாரம்..!

2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு தேர்தலாக கருதப்படுகிறது. காரணம், புதிதாக கட்சிகள் இணைக்கப்பட்டு அக்கட்சிகள் மாபெரும் மாநாடுகளை நடத்தி மக்களின் மனதில் சற்று நிலைத்திருப்பதாக அரசியல் விமர்சனகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இளைஞர்களுடைய பலமும் அக்கட்சியில் வலுபெற்று இருப்பதாக உத்தேச கருத்து கணிப்பில் தெரிவித்து வருகின்றனர். 


அவ்வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கு பெற்று உரையாற்றினர். 


அதைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றும் போது, "நடிகர்கள் கட்சி தொடங்கினால் விசிக பலவீனமடையும் என ஊடகங்ளில் எழுதுவார்கள். தேமுதிக தொடங்கப்பட்ட போது விசிக பலவீனமடையும் என எழுதினார்கள். விசிகாவை சேதப்படுத்த முடியாது. நம்முடைய கொள்கை, களம் புதியது. சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை திசைத்திருப்பி, மடை மாற்ற முடியாது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கையால் உள்வாங்கி இளைஞர்களை மடைமாற்ற முடியாது. கொள்கை அளவில் பன்பட்ட இயக்கமாக விசிக உள்ளது. அதனால் தான் பல கட்சி தலைவர்கள் வாழ்த்தி அங்கீகரித்துள்ளனர். 


கொள்கை பிடிப்புள்ள இளைஞர்களை அனிதிரட்ட களத்தில இறங்கினேன். தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவோம் என வரவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கலத்தில் தாக்கு பிடிக்கிறோம் அது தான் வெற்றி என்று கூறியுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் கொடுக்கும் கட்சிக்கு போவதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக அந்த நிலைபாட்டில் தற்போது நாங்கள் முரண்பட்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment