| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

பிராய்லர் கோழி விலை கிடுகிடு உயர்வு - அசைவ பிரியர்கள் அதிர்ச்சி !

by satheesh on | 2026-01-20 08:52 AM

Share:


பிராய்லர் கோழி விலை கிடுகிடு உயர்வு - அசைவ பிரியர்கள் அதிர்ச்சி  !

கிடுகிடுவென உயர்ந்த கறிக்கோழி விலை.. உயர்வுக்கு காரணம் என்ன?* நாமக்கல்: கடந்த சில நாட்களாகவே அசைவ பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கோழிப் பண்ணைகளில் கறிக்கோழி விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.380 ஐ தொட்டுள்ள நிலையில் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீரென கறிக்கோழி விலை உயர்வுக்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடந்த ஓராண்டாகவே கறிக் கோழி வளர்ப்பவர்களுக்கு உரிய 'வளர்ப்பு கூலி' வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது போராட்டத்திலும் இறங்கியுள்ளதால் தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், இதில் சுமூக முடிவு எடப்பட்டால் கறிக்கோழி விலை குறையும் என கூறப்படுகிறது.

கறிக்கோழி விலை திடீர் உயர்வு; அசைவ பிரியர்களின் உணவுப் பட்டியில் கறிக்கோழி 'சிக்கன்' இல்லாமல் இருக்காது. சிக்கன் 65, கிரில், கறிக் குழம்பு, சிக்கன் பிரியாணி என பல வகை உணவுகளுக்கும் கறிக்கோழி பயன்படுகிறது. அன்றாட உணவுகளில் பலரும் சிக்கனை சேர்த்து வருகிறார்கள். இல்லத்தரசிகளும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கன் இருந்து வருகிறது.. தமிழகத்தில் நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகள் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு இருந்தே கறிகோழிகள் மட்டும் முட்டைகள் தமிழகம் மட்டும் இன்றி பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களாகவே கறிக்கோழி விலை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி கறிக்கோழி விலை உச்சத்தை தொட்டது. விலை உயர்வுஏன்?  திடீரென கறிக்கோழி விலை ரூ.350 வரைக்கும் விற்பனை ஆனதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.380 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் விலை ரூ.380 வரை விற்பனை செய்யப்பட்டதால் சிக்கன் விரும்பிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வழக்கமாக தைப்பூசம் திருநாளையொட்டி அதிகம் பேர் விரதம் இருப்பதால் விலை குறைந்து தான் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரிக்க முக்கிய காரணமாக கறிக்கோழி வளர்ப்பவர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருவது தான் என தெரியவந்துள்ளது. கறிக் கோழி வளர்ப்பவர்களுக்கு உரிய வளர்ப்பு கூலி வழங்க கோரி கடந்த ஓராண்டாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.

கறிக்கோழி வளர்ப்பவர்கள் போராட்டம் : இந்த நிலையில் தான் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் உருவாக்கப்பட்ட பண்ணை விவசாயிகள் அணியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கு கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கிலோவுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வழங்கி வருகின்றன. இந்த தொகையை தற்போது 20 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தீவனம், மருந்து விலை உயர்ந்துள்ளதை காரணம் காட்டி வளர்ப்பு கூலியை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி கடந்த 7 ஆம் தேதி சென்னையில் உள்ள கால்நடைத் துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கறிக்கோழி வளர்ப்பவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை. வீடுகளில் சிக்கன் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி ஹோட்டல்கள், சிற்றுண்டி கடைகள், திருமண வீடுகள், கோழி வியாரிகள், கறிக்கோழி கடைகள் என பலவற்றிலும் கறிக்கோழி விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த அரசும் முன்வந்துள்ளது. இதன்படி அரசு நிறுவனங்கள், கோழி வளர்ப்பு விவசாயிகள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையானது வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் சிக்கன் விலை மீண்டும் குறைந்துவிடும். அதே சமயம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிடில் கறிக்கோழி விலை ரூ.400 ஐ தாண்டி விற்பனை ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

இணை ஆசிரியர்  : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment