| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள்..!!! நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

by admin on | 2025-12-06 07:29 PM

Share:


டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள்..!!! நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

தேனி யில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற நிகழ்ச்சியில்    1952 பயனாளிகளுக்கு ரூ.11.38  கோடி  மதிப்பிலான அரசின் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்                                          இன்று  (06.12.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து,  தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட அம்பி வெங்கிடசாமி நாயுடு மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில்   1952 பயனாளிகளுக்கு ரூ11.38 கோடி மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லாருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் சிறந்த மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில் கல்வி, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து முன்மாதிரியான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.   மேலும், விளிம்பு  நிலையில்  உள்ள மக்களுக்கு தேவையான மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கு  துணை நிற்கின்ற அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  ஒரு சமூகத்தின்  முன்னேற்றத்திற்கு மிகவும் அடிப்படையாக விளங்குவது கல்வி.  அதனடிப்படையில் கல்வி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 


அதனைத் தொடர்ந்து,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்  189 பயனாளிகளுக்கு ரூ.1,09,75,992/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்,  11 பயனாளிகளுக்கு ரூ.73,590/- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,  21  பயனாளிகளுக்கு குடும்ப நல  அடையாள அட்டைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 237 பயனாளிகளுக்கு ரூ.1,46,97,281/- மதிப்பிலான                          இ-பட்டாக்களையும்,   தாயுமானவர் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.14,84,860/- மதிப்பிலான இலவச பட்டாக்களையும்,  தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத்திட்டத்தின் (CM ARISE) கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.20,74,991/- மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும்,  பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதய் யோஜனா (PM-AJAY) திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.5,05,000/- மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும்,  தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 5 தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளையும்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்                                                         17 பயனாளிகளுக்கு ரூ.10,40,000/- அமுத சுரபி கடன் பெறுவதற்கான ஆணைகளையும்,                    23 பயனாளிகளுக்கு ரூ.20,80,000/-  சமுதாய முதலீட்டு நிதி பெறுவதற்கான ஆணைகளையும்,  1009 பயனாளிகளுக்கு ரூ.1,68,14,000/- நலிவு நிலை குறைப்பு கடன் உதவிக்கான ஆணைகளையும், 49 பயனாளிகளுக்கு ரூ.24,50,000/- வட்டார வணிக வள மைய கடன் பெறுவதற்கான ஆணைகளையும், 22 பயனாளிகளுக்கு ரூ.2,91,18,000/- வங்கி கடன் இணைப்புகளையும்,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில்   10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும்,   கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4,95,795/- மதிப்பீட்டில் நாட்டுகோழி பண்ணை அமைப்பதற்கான ஆணைகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.1,03,744/- மதிப்பீட்டிலான புல் நறுக்கும் கருவிகளையும்,  மாவட்ட தொழில் மையம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சார்பில்  5 பயனாளிகளுக்கு ரூ.2,37,500/-  மானிய கடனுதவிகளையும்,  வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,25,000/- மதிப்பிலான சுழல்கலப்பை, மண்புழு உரப்படுகை, விசைத்தெளிப்பான்களையும்,     


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்  தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு  ரூ.1,48,000/- மதிப்பீட்டில் வெங்காய கிட்டங்கி மற்றும் திசுவாழை பரப்பு விரிவாக்கம் அமைப்பதற்கான ஆணைகளையும்,  மானாவரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.30,000/- மதிப்பிலான இடுபொருட்களையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில்  1 பயனாளிக்கு ரூ.8,00,000  மானிய விலையில் வேளாண் இயந்திரம் பெறுவதற்கான ஆணையினையும்,  முன்னோடி வங்கி சார்பாக                              2 பயனாளிக்கு ரூ.2,63,000/- கல்விக் கடனுதவிகளையும்,  தொழிலாளர் நலத்துறையின் சார்பில்  9 பயனாளிகளுக்கு ரூ.10,800/- ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,  4 பயனாளிகளுக்கு ரூ.1,56,200/- இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.38,92,000/- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  வீடுகள் பெறுவதற்கான ஆணைகளையும்,  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.4,60,000/- நுண் நிறுவன கடன் நிதிகளையும்,  சமூக நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.3,00,000/- பெண் குழந்தை பாதுகாப்பு முதிர்வு தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில்  74 பயனாளிகளுக்கு ரூ.2,29,40,000/-  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞரின் கனவு  இல்லம் பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1,73,880/-  மதிப்பிலான திறன்பேசிகளையும்,  5 பயனாளிகளுக்கு ரூ.31,795/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும்,  சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்   9 பயனாளிகளுக்கு ரூ.1,57,250/-  உழவர் பாதுகாப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.1,00,000/- நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், நகராட்சித்துறையின் சார்பில்  15 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.30,000/- மதிப்பிலான பாதுகாப்பு பெட்டகங்களையும்,  பேரூராட்சித்துறையின் சார்பில்  20 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.40,000/- மதிப்பிலான பாதுகாப்பு பெட்டகங்களையும், ஊராட்சி சார்பில் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2,10,000/- மதிப்பிலான பாதுகாப்பு பெட்டகங்களையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில்  அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,000/-  நிதி உதவி பெறுவதற்கான அடையாள அட்டைகளையும்,  கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,68,448/- பயிர்க்கடன் பெறுவதற்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2,34,000/- கால்நடை பராமரிப்பு கடன் பெறுவதற்கான ஆணைகளையும், 1 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1,60,000/- கடன் பெறுவதற்கான ஆணைகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11,80,000/-  மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியம் பெறுவதற்கான ஆணைகளையும்,  6 பயனாளிகளுக்கு மீனவர் நலவாரிய உறுப்பினர் அடைகள் என மொத்தம் 1,952 பயனாளிகளுக்கு ரூ.11,38,81,126/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,                     அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், திட்ட இயக்குநர்கள் திருமதி அபிதா ஹனீப்(ஊரக வளர்ச்சி), திருமதி சந்திரா (மகளிர் திட்டம்),  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சம்பூர்ணம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திரு.சண்முகசுந்தரம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.கார்த்திகேயன்,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகது, வட்டாட்சியர்கள் திரு.சரவணபாபு (ஆதிதிராவிடர் நலன்) திரு.சதீஸ்குமார் (தேனி), திரு.மருதுபாண்டி (பெரியகுளம்), திரு.ஜாஹிர் உசேன் (ஆண்டிபட்டி),  திரு.சந்திரசேகரன் (போடிநாயக்கனூர்), திரு.அர்ஜீனன் (ச.பா.தி.),                          தேனி-அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.செல்வம், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற உறுப்பினர் திரு.பாலமுருகன்,  பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.


T. Muthu kamachi evidence editor. 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment