| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...! பில் யார் கொடுப்பாங்க..? வைரலாகும் சிசிடிவி காட்சி..!

by Vignesh Perumal on | 2025-12-06 06:58 PM

Share:


கொடைக்கானலில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு...! பில் யார் கொடுப்பாங்க..? வைரலாகும் சிசிடிவி காட்சி..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், ஏரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குள் திடீரெனக் காட்டெருமை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலுக்குள் யாரும் இல்லாததைக் கண்ட காட்டெருமை மீண்டும் வெளியேறிய சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் முன் பகுதி வழியாகத் திடீரென நுழைந்த காட்டெருமை, ஹோட்டலுக்குள் சில நிமிடங்கள் சுற்றியது. ஆனால், அந்த நேரத்தில் ஹோட்டலில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்த காட்டெருமை, தான் சாப்பிட எதுவும் கிடைக்காததாலோ அல்லது அமைதி இல்லாததாலோ மீண்டும் மெதுவாக வெளியேறிச் சென்றது. இந்த முழுச் சம்பவமும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில், "ஒரு வேளை சாப்பிட வந்து இருக்குமோ - பில் யார் கொடுப்பாங்க?" போன்ற வேடிக்கையான தலைப்புகளுடன் வைரலாகப் பரவி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக, காட்டெருமை ஹோட்டலுக்குள் புகுந்த நேரத்தில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், எந்தவிதமான அசம்பாவிதமும் அல்லது சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள நகரப் பகுதிகளில் காட்டெருமைகள் அவ்வப்போது நுழைவது வழக்கம் என்றாலும், இவ்வாறு ஹோட்டல்களுக்குள் நுழைவது மக்களிடையே ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment