| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

விருதுநகர் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நீர் திறப்பு...!!!

by admin on | 2025-12-06 05:43 AM

Share:


விருதுநகர் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நீர் திறப்பு...!!!

வைகை அணையல் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு.

 விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருதுமால் நதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது- விருதுநகர்,. சிவகங்கை ,   ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் இன்று முதல் 8 நாட்களுக்கு வைகை ஆற்றின் வழியாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர்மட்டம் 64 அடியாக உள்ள நிலையில்  அரசின் உத்தரவுப்படி வைகைஅணையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருத்துமால் நதி பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உபவடி நிலங்களில் அமைந்துள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதி பாசனத்திற்கு இன்று முதல் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ச்சியாக 8 நாட்களுக்கு திறக்கப்படும் என்றும்

 இதன்மூலம் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் திறக்கப்படும் தண்ணீர் வைகைஆற்றின் வழியாக திறக்கப்படுவதாகவும் வைகை பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது வைகைஅணையில் நீர் இருப்பு 4378 மில்லியன் கன அடியாகவும், வைகைஅணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1346 கன அடியாகவும் உள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment