| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் ₹10,000 லஞ்சம் வாங்கிய...! கிராம நிர்வாக அலுவலர் கைது...!

by Vignesh Perumal on | 2025-12-05 05:29 PM

Share:


திண்டுக்கல்லில் ₹10,000 லஞ்சம் வாங்கிய...! கிராம நிர்வாக அலுவலர் கைது...!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, மணலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில், நிலத்தின் பட்டா பெயர் மாற்றத்திற்காக ₹10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) முருகன் இன்று (டிசம்பர் 5, 2025) லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

மணலூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் முருகன் என்பவர், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் இளையராஜா (45) என்பவரது நிலம் தொடர்பான வேலையை முடித்துக் கொடுக்க லஞ்சம் கேட்டுள்ளார்.

இளையராஜாவுக்குச் சொந்தமான கன்னிவாடி அருகே உள்ள ஆறரை ஏக்கர் நிலத்திற்குப் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக வி.ஏ.ஓ. முருகன் ₹10,000 லஞ்சமாகக் கேட்டு நிர்ப்பந்தம் செய்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, இதுகுறித்துத் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில், இளையராஜா இன்று (டிசம்பர் 5) இளையராஜாவிடம் இரசாயனம் தடவிய பணத்தை வழங்கியபோது, அதை வி.ஏ.ஓ. முருகன் வாங்கியுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், வி.ஏ.ஓ. முருகனை லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.










செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment