| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

வீடியோ எடுக்க அனுமதி இல்லை..! தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-12-05 05:04 PM

Share:


வீடியோ எடுக்க அனுமதி இல்லை..!  தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை...!

ரயில் நிலைய வளாகங்களில் உரிய அனுமதியின்றி விடியோ எடுப்பது, புகைப்படம் பதிவிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராகத் தவறான அல்லது அவதூறு கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சமீபகாலமாகப் பல சமூக ஊடகப் படைப்பாளிகள் (Social Media Creators) ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் வினோதமான செயல்களைச் செய்து, அதனை விடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்துச் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'உரிய அனுமதியின்றி ரயில்வே வளாகத்தில் vlogs, வீடியோ பதிவு, புகைப்படம் எடுப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இந்தச் செயல்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வேயின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியவை.

ரயில்வே நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துச் சமூக ஊடகங்களில் தவறான அல்லது அவதூறு கருத்துக்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே எச்சரித்துள்ளது.

சமூக ஊடகப் படைப்பாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ரயில்வே வளாகத்தில் இருக்கும்போது, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ரயில்வேயின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment