by Vignesh Perumal on | 2025-12-05 03:47 PM
திண்டுக்கல்லில் பட்டாக் கத்தியுடன் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் மகன் ஆரோக்கியகிளின்டன் (24) என்பவர் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
போலீசாரைக் கண்டதும் ஆரோக்கியகிளின்டன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ஆரோக்கியகிளின்டனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அந்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கோயில் விடுதிகளை TTDC நிர்வகிக்க இடைக்காலத் தடை...! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...!
கோயில் விடுதிகளை TTDC நிர்வகிக்க இடைக்காலத் தடை...! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...!
கோயில் விடுதிகளை TTDC நிர்வகிக்க இடைக்காலத் தடை...! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...!
உலகக் கோப்பை வென்ற வீராங்கனை ரிச்சா கோஷ்...! டிஎஸ்பி-யாகப் பதவியேற்பு...!!
உலகக் கோப்பை வென்ற வீராங்கனை ரிச்சா கோஷ்...! டிஎஸ்பி-யாகப் பதவியேற்பு...!!