| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு...!

by Vignesh Perumal on | 2025-12-05 10:58 AM

Share:


தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு...!

தேனி மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (டிசம்பர் 4, 2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்திலும், பல்வேறு வகையான நூல்கள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நான்காவது புத்தகத் திருவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, புத்தக அரங்குகள், நுழைவாயில் மற்றும் மேடை அமைப்பதற்கான இடம். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிற்பதற்கான இடம். சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடம் அமைத்தல். உணவுப்பொருள் விற்பனைக் கூடங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் அரங்குகள் மற்றும் கண்காட்சிகள். தற்காலிகக் கழிவறை வசதி. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போதுமானதாக உள்ளதா? ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பராஜ்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. முத்துமாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. இரா. நல்லதம்பி, உதவி செயற்பொறியாளர் திரு. சரவணக்குமார், உதவி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் திரு. குமரேசன், நகராட்சி ஆணையாளர் செல்வி. பார்கவி, வட்டாட்சியர் திரு. சதீஸ்குமார், நூலகக் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் உட்படப் பலர் உடனிருந்தனர்.விரைவில் நடைபெற உள்ள இந்த நான்காவது புத்தகத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment