by admin on | 2025-12-03 06:21 PM
ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி திருக்கோயில் இரவு நேர காவலர்கள் கொலை வழக்கு-குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி திருக்கோயிலில் கடந்த நவம்பர் 11-ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கர பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது மாவட்ட எஸ்பி மாவட்ட கண்ணன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சுகபுத்ரா குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் கே எஸ் ராஜேந்திரன் விருதுநகர்.