| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாஜக பொறுப்பாளர்கள் நேரில் ஆய்வு...!!!

by admin on | 2025-12-03 02:02 PM

Share:


புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாஜக பொறுப்பாளர்கள் நேரில் ஆய்வு...!!!

டிட்வா புயலின் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து, விவசாய நிலங்கள் தண்ணீரில் முழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளது.

 டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 28-ஆம் தேதியில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து இருக்கிறார்கள். இதனை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்யவும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கலந்து ஆலோசனை செய்ய மாநில விவசாயி அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுச் செயலாளர்கள் 

எஸ் என் எம் ராமலிங்கம் , ராஜேஷ் கண்ணா,  துணைத் தலைவர்கள் ராஜாராமன்,சந்திரசேகரன் , மாநில அலுவலக செயலாளர் திருமுருகன் , மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கோபி, மாநிலசெயற்குழு உறுப்பினர் குகன், மாநிலத் திட்ட பொறுப்பாளர்கள் ரவீந்திரன் ,கணேசமூர்த்தி, கிஷோர் ,பிரபாகரன் ,  கணேசன் ,ரமேஷ், ஜெ.விவேக்.மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர்கள் தஞ்சாவூர் தெற்கு தங்கவேல் தஞ்சாவூர் வடக்கு துறை சம்பத் மயிலாடுதுறை பாலமுருகன் திருவாரூர் அறிவுராம் நாகப்பட்டினம் பாபு பிரசாத் திருச்சி நகர் வெங்கடேஷ் திருச்சி புறநகர் சசிகுமார் ஆகியோர் கொண்டனர் . பொறுப்பாளர்கள் குழு நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர் . நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் மற்றும் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலரும் கலந்து அப்போது விவசாயிகள் அக்குழுவினரிடம் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர் வாராதால் தான் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதாக  வருத்தத்துடன் தெரிவித்தனர். மற்றும் சில இடங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.2025 -ஆண்டில் இரண்டாவது முறையாக புயலின் தாக்கத்தால் டெல்டா மண்டல விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகுந்த துயரத்தையும், நஷ்டத்தையும் அடைந்துள்ளதாகவும் 

எனவே வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக விவசாய அணி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தியாளர் டாக்டர் இளங்கோ திருவாரூர் 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment