| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போலியான இணையதளம் மூலம் பங்கு சந்தையில் ஏமாந்தவர்களின் பணம் மீட்பு....!!!!

by admin on | 2025-12-02 10:16 PM

Share:


போலியான இணையதளம் மூலம் பங்கு சந்தையில் ஏமாந்தவர்களின் பணம் மீட்பு....!!!!

போலியான இணைய தளம் மூலம் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ஆன்லைன் மூலம் ரூ.48,00,000/- ஏமாற்றிய நபர்களிடமிருந்து பணத்தை மீட்டு, காவல் ஆணையர் அவர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள்.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட ராக்போர்ட் நகரில் வசிக்கும் 75 வயது ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுதருவதாக உறுதியளித்து வாட்ஸ்ஆப்-ல் வந்த குறுஞ்செய்தியில் உள்ள LINK மூலம் ரூ.48 இலட்சம் முதலீடு செய்தும், அவர்கள் உறுதியளித்தபடி பணம் திரும்ப கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருச்சி மாநகர சைபர் குற்றப் பிரிவில் மேற்படி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கடந்த 11.11.2025ந்தேதி கொடுத்த புகார் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி.,இ.கா.ப அவர்களின் உத்திரவின்பேரில், திருச்சி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மனுரசீது வழங்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையில், மனுதாரரிடம் Wexdor.com என்ற போலி இணையதளம் மூலம், அவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த LINK மூலம் மனுதாராருக்கு என மேற்கண்ட இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டு உண்மையாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதுபோல நம்ப வைத்து, மனுதாரரிடமிருந்து ரூ.48 இலட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார்கள் என்பதும், மனுதாரர் இழந்த பணம் குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள இரு வங்கி கணக்குகளுக்கு சென்றிப்பதும், அவ்வங்கிகளில் இருந்து சுமார் 20 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் காவல் துறையினரின் தொடர் நடவடிக்கையின் காரணமாக மனுதாரர் இழந்த பணம் ரூ.48 இலட்சம் முழுவதும், திருச்சி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, பணம் மீட்கப்பட்டு, மனுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதற்குண்டான ஆவணங்களை (Statement) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாதிக்கப்பட்ட மனுதாரரை நேரில் அழைத்து வழங்கினார்கள்.

தி .முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்.9842337244


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment