by Vignesh Perumal on | 2025-12-01 12:33 PM
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே குன்னத்தூரில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் நேருக்கு நேர் மோதி இரண்டு பெண்கள் உயிரிழந்த விபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே நடந்த இந்த விபத்தில் அம்முலு (24) மற்றும் உமா (40) ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக முதலமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து (CMRF) நிவாரணத் தொகையை மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவரம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ₹1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ₹50,000.
காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்