| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 11 பேர் உயிரிழப்பு...!!

by admin on | 2025-11-30 08:22 PM

Share:


அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 11 பேர் உயிரிழப்பு...!!

சிவகங்கை, திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி சாலையில், காரைக்குடிக்கும், மதுரைக்கும் சென்று கொண்டிருந்த, இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில், ஒன்பது பெண்கள் இரண்டு ஆண்கள் உள்ளிட்ட, பதினோரு பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த துயரத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இது மிகுந்த பேரிழப்பாகும்.


உயிரிழந்த பதினோரு பேரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்த நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள், விரைவில் குணமடைய  வேண்டுகிறேன்.இந்த விபத்து நடைபெறக் காரணமான அம்சங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இனி இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தையும் வழங்க வேண்டும்.

தி.வேல்முருகன், நிறுவனத் தலைவர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment